• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிவசேனா கோரிக்கை - குடியரசுத் தலைவர் ஆட்சி: மகாராஷ்டிரா குறித்து மனம் திறந்த அமித்ஷா

சிவசேனா கோரிக்கை - குடியரசுத் தலைவர் ஆட்சி: மகாராஷ்டிரா குறித்து மனம் திறந்த அமித்ஷா

அமித்ஷா

அமித்ஷா

சட்டசபை பதவிக்காலம் முடிந்தபிறகுதான் ஆளுநர் அழைப்புவிடுக்க முடியும். இன்று யாருக்கேனும் பெரும்பான்மை இருந்தால் கூட ஆட்சியமைப்பதற்கு ஆளுநரை நாடலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேர்தலுக்கு பிறகு சிவசேனா முதலமைச்சர் பதவி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பா.ஜ.க தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையிலும் இரு கட்சியிடையே கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால் அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானது. அதனையடுத்து, நேற்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

    அதில், ‘தேர்தலுக்கு முன் பல்வேறு பொதுக்கூட்டங்களில் நானும், பிரதமர் மோடியும் தேர்தலில் வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வர் என்று பேசினோம். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது அவர்கள் புதிய கோரிக்கைகளுடன் வருகின்றனர். அதனை நாங்கள் ஏற்க முடியாது. இதுவரையில் எந்த மாநிலங்களுக்கும் ஆட்சியமைப்பதற்கு இத்தனை நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதில்லை. 18 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    சட்டசபை பதவிக்காலம் முடிந்தபிறகுதான் ஆளுநர் அழைப்புவிடுக்க முடியும். இன்று யாருக்கேனும் பெரும்பான்மை இருந்தால் கூட ஆட்சியமைப்பதற்கு ஆளுநரை நாடலாம். யாருக்கும் வாய்ப்பு அளிப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மிகவும் படித்த வழக்கறிஞரான கபில் சிபல், காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று குழந்தைப் போல வாதங்களை முன்வைக்கிறார்’ என்று தெரிவித்தார்.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: