• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்ஷா

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்ஷா

அமித் ஷா.

அமித் ஷா.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும், ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.



    மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ’ஒரு நாடு ஒரே மொழி’ கனவை மக்கள் நனவாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: