• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பொருளாதார மந்தநிலை! மத்திய அரசு நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா விளக்கம்

பொருளாதார மந்தநிலை! மத்திய அரசு நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா விளக்கம்

அமித்ஷா

அமித்ஷா

உலக அளவில் மந்தநிலையை எதிர்கொள்ளும்போது, உலகமயமாக்கலின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எந்த நிலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எந்த நிலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைந்துள்ளது என்பதைக் கொண்டுதான் எங்கள் ஆட்சியின் செயல்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

  நாட்டின் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷியுடனான நேர்காணலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கினார். அந்தப் பேட்டியில், ‘பொருளாதார மந்தநிலை குறித்த கேள்விக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் பதிலளிக்கிறேன். இந்த பொருளாதார மந்தநிலை விவகாரத்தில், முதலாவதாக 1990-ம் ஆண்டு இந்த உலகமும் இந்தியாவும் உலகமயமாகின மற்றும் தாராளமயமாகின. அந்த நேரத்திலிருந்து ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் ஒன்றே. இந்த பொருளாதார மந்தநிலை இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. இது உலகம் முழுமைக்கும். ஏனென்றால் உலக அளவில் மந்தநிலையை எதிர்கொள்ளும்போது, உலகமயமாக்கலின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

  இந்தியாவின் பொருளாதாரத்தை உலகத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது தேவையற்றது. முதல் பத்து இடங்களிலுள்ள பொருளாதார நாடுகளை நீங்கள் பார்க்கவேண்டும். அவர்களுடைய ஜி.டி.பியின் அளவு, எத்தனை சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாக குறைந்துள்ளது என்று பார்க்கவேண்டும். பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் குறைந்துள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இந்த ஒப்பீடு கட்டாயம் செய்யப்படவேண்டும். எங்களுடைய செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு இதுதான் சிறந்தவழி.

  இரண்டாவதாக, எப்படி இதிலிருந்து மீள்வது? உலக அளவில் மந்தநிலை தொடங்கியதிலிருந்து இந்திய நிதியமைச்சர் வர்த்தகம் செய்பவர்கள், பொருளாதார வல்லுநர்கள், ஆடிட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்மூலம் பல யோசனைகள் கிடைத்தன. அரசால் பல முடிவுகளுடன் வர முடிந்தது. ஐந்து கட்டங்களாக அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதிர்ஷ்டமாக, காரிப் வகைப் பயிர்கள் சிறந்த முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. நாடு முழுவதும் போதுமான மழை பெய்துள்ளன. இந்தப் பயிர்கள் மட்டும் 5-6 லட்சம் கோடி மதிப்புள்ளவை. நிதி அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் அதனை பலனை விரைவில் காட்டத் தொடங்கும். சூழ்நிலைகள் விரைவில் முன்னேற்றமடையும். பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதுகுறித்து எதுவும் இப்போது தெரிவிக்க முடியாது.

  நிதியமைச்சரும், பிரதமரும் அதுகுறித்து முடிவு செய்வார்கள். பெருநிறுவன வரி நீக்கம் என்பது நீண்ட கால செயல்திட்டம். அதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகள் லாபகரமான இலக்கை எட்டும். அந்த முயற்சி, மிகப் பெரிய முதலீடுகள் வருவதற்கான பாதையாக அமையும் என்று நாம் நம்புகிறேன். ரகுராம் ராஜன் கருத்து குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. நான் சர்ச்சைகளை உருவாக்க விரும்பவில்லை. கொள்கை உருவாக்கம்(POLICY MAKING) என்பதுதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்றத்தின் பணி. 10 வருடங்களாக வங்கிகள் அரசியல்வாதிகள் போன் கால்கள், கடிதங்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. கடந்த 5 வருடங்களில் மோடி பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அதனைச் சரிசெய்துள்ளார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: