• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சாவர்க்கரைப் போல தியாகம் செய்தவர்கள் கிடையாது! பாரத் ரத்னா விருது குறித்து அமித்ஷா விளக்கம்

சாவர்க்கரைப் போல தியாகம் செய்தவர்கள் கிடையாது! பாரத் ரத்னா விருது குறித்து அமித்ஷா விளக்கம்

அமித்ஷா

அமித்ஷா

இந்த நாட்டில் வேறு எந்தக் குடும்பத்தின் சொத்துகளும் ஆங்கிலேயர்களால் பலமுறை பிடுங்கிக் கொள்ளப்பட்டது கிடையாது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சாவர்க்கரின் மேன்மையை விமர்சிப்பவர்கள், இந்த நாட்டின் உணர்வுடன் விளையாடுகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ கொள்கையை வரையறுத்தவருமான சவார்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்று மஹாராஷ்டிரா பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த விவகாரம் குறித்து நியூஸ் 18 குழு ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

    அந்தப் பேட்டியில், ‘பாரத் ரத்னா விருது வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்து எனக்கு இப்போது தெரியாது. ஆனால், சாவர்க்கர் குறித்த என்னுடைய பார்வை தெளிவானது. மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் சாவர்க்கரைப் போன்ற தேசப்பற்றாளர்கள் இருப்பார்கள். மற்றும் மிகக் குறைவான குடும்பங்கள்தான் சாவர்க்கரின் குடும்பங்களைப் போல நாட்டுக்குத் தியாகம் செய்திருப்பார்கள்.

    இந்த நாட்டில் எந்த நபருக்கு இரண்டு பிறந்த தேதிகள் கிடையாது. இந்த நாட்டில் வேறு எந்த நபரும் சிறைச்சாலையில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டது கிடையாது. மேலும், பாம்பிலிருந்து தேங்காய் எண்ணெய்யை பிரித்து எடுத்து வரச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டது கிடையாது. இந்த நாட்டில், வேறு எந்த குடும்பத்திலும் இரண்டு சகோதரங்கள் 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்படவில்லை.

    மேலும், அவர்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் 12 ஆண்டுகளாக பார்த்துக் கொள்ள முடியாமல் இருந்ததில்லை. இந்த நாட்டில் வேறு எந்தக் குடும்பத்தின் சொத்துகளும் ஆங்கிலேயர்களால் பலமுறை பிடுங்கிக் கொள்ளப்பட்டது கிடையாது. சாவர்கரின் ஆளுமை குறித்து விவாதம் செய்பவர்கள், இந்த நாட்டின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள்.

    அவர்கள், சாவர்க்கரை மக்கள் முன்னுதாரணமாக எடுப்பதைத் தடுத்து பாவம் செய்கிறார்கள். இந்தியா, இந்து ராஷ்டிரமாக இருந்திருந்தால், இந்து ராஷ்டிராவின் கரு வரையறுக்கப்பட்டிருக்கும். இந்தியா அதனுடைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படவேண்டும். தற்போது, அதன்படி செயல்பட்டுவருகிறது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: