ஹோம் /நியூஸ் /இந்தியா /

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - எதிர்கட்சிகள் மீது அமித்ஷா குற்றச்சாட்டு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - எதிர்கட்சிகள் மீது அமித்ஷா குற்றச்சாட்டு

அமித்ஷா

அமித்ஷா

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் முறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரையை தொடங்கி வைத்து அமித்ஷா பேசினார்.

அப்போது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களை வணங்குவதாக அவர் தெரிவித்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் ஓய்வின்றி உழைத்து வருவதாகவும், தொழிலாளர்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் ஒன்றேகால் கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

அகதிகளுக்கு குடியுரிமையையும் மரியாதையையும் அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see:

First published:

Tags: Amit Shah, Bihar