கேரளா செல்ல திட்டமா?: மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. கட்டுப்பாடுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க!

கேரளா

கேரளாவில் டபுள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்.95 மாஸ்க் அணிந்திருந்தால் ஒரு மாஸ்கே போதுமானது. இதர மாஸ்குகள் என்றால் இரண்டு கட்டாயம், இந்த விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடப்படுகிறது.

  • Share this:
கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில், புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பும் அச்சுறுத்தி வருகிறது, இந்நிலையில் கேரளாவுக்கு சுற்றுலா அல்லது வேலை விஷயமாக செல்கிறீர்கள் என்றால் அங்கு அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வது நல்லது.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. அங்கு நேற்று (ஜூலை 13) மட்டும் 14,539 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன் 124 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா மட்டுமல்லாது ஜிகா வைரஸ் பாதிப்பும் கேரளாவுக்கு புதிய அச்சுருத்தலாக உருவாகி உள்ளது. இதுவரை ஜிகா வைரஸால் 19 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

வேலை, சுற்றுலாவுக்காக கேரளா செல்வோர் அங்கு இருக்கும் கள சூழலையும் தெரிந்து கொண்டு பயணிக்க வேண்டும். கேரளாவுக்குள் செல்வதற்கும், திரும்புவதற்கும் இ-பாஸ் அவசியம்.

Also Read:  சுயநினைவு திரும்பல; மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் அங்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது, கடந்த ஜூலை 12 மற்றும் 13ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போல வரும் சனி, ஞாயிறு அதாவது ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அங்கு அத்யாவசிய கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை விதிகள் அமல்படுத்தப்பட்டது போல கேரளாவில் கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து ஏ.பி.சி,டி என 4 வகையாக பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

Also Read:   ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடி சிக்கினார்!

கேரளாவில் டபுள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்.95 மாஸ்க் அணிந்திருந்தால் ஒரு மாஸ்கே போதுமானது. இதர மாஸ்குகள் என்றால் இரண்டு கட்டாயம், இந்த விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடப்படுகிறது.

பருவ மழையும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கிறது. இடுக்கி, வயநாடு, திருச்சூர், கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஜூலை 17ம் தேதி வரை மழை கடுமையாக பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, திருச்சூர், மழை, இடுக்கி, பினராயி விஜயன், கொரோனா வைரஸ், ஜிகா வைரஸ், சுற்றுலா, இ பாஸ், பு சற்றும் குறையாத நிலையில், புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பும் அச்சுறுத்தி வருகிறது, இந்நிலையில் கேரளாவுக்கு சுற்றுலா அல்லது வேலை விஷயமாக செல்கிறீர்கள் என்றால் அங்கு அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வது நல்லது.

Also Read:   டெல்டா வேரியண்டால் அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. அங்கு நேற்று (ஜூலை 13) மட்டும் 14,539 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன் 124 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா மட்டுமல்லாது ஜிகா வைரஸ் பாதிப்பும் கேரளாவுக்கு புதிய அச்சுருத்தலாக உருவாகி உள்ளது. இதுவரை ஜிகா வைரஸால் 19 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

வேலை, சுற்றுலாவுக்காக கேரளா செல்வோர் அங்கு இருக்கும் கள சூழலையும் தெரிந்து கொண்டு பயணிக்க வேண்டும். கேரளாவுக்குள் செல்வதற்கும், திரும்புவதற்கும் இ-பாஸ் அவசியம்.

கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் அங்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது, கடந்த ஜூலை 12 மற்றும் 13ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போல வரும் சனி, ஞாயிறு அதாவது ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அங்கு அத்யாவசிய கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை விதிகள் அமல்படுத்தப்பட்டது போல கேரளாவில் கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து ஏ.பி.சி,டி என 4 வகையாக பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் டபுள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்.95 மாஸ்க் அணிந்திருந்தால் ஒரு மாஸ்கே போதுமானது. இதர மாஸ்குகள் என்றால் இரண்டு கட்டாயம், இந்த விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பருவ மழையும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கிறது. இடுக்கி, வயநாடு, திருச்சூர், கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஜூலை 17ம் தேதி வரை மழை கடுமையாக பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: