ஹோம் /நியூஸ் /இந்தியா /

பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு... நவம்பர் 8 வரை ஆன்லைன் வகுப்பு..நொய்டாவில் காற்று மாசு காரணமாக நடவடிக்கை

பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு... நவம்பர் 8 வரை ஆன்லைன் வகுப்பு..நொய்டாவில் காற்று மாசு காரணமாக நடவடிக்கை

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

நொய்டா பகுதியில் காற்றின் தரம் மிக மோசமாகிவுள்ளதால், அங்கு 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  குளிர்காலம் தொடங்கினாலே தலைநகர் டெல்லியை காற்று மாசு பிரச்சினை வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. அக்டோபர் மாத காலத்தில் தொடங்கும் இந்த காற்று மாசு பாதிப்பு பிப்ரவரி வரை நீடித்து டெல்லி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்குகிறது. இந்நிலையில், இந்தாண்டும் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை கடந்த சில வாரங்களாக தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

  டெல்லி அரசும் காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும், காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது.குறிப்பாக, நொய்டா பகுதியில் காற்றின் தரம் மிக மோசமாகிவுள்ளதால், அங்கு 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  டெல்லியில் சுமார் 1,800 பள்ளிகள் உள்ள நிலையில், அந்த பள்ளிகள் வரும் 8ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாத்தியப்பட்டால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு எடுக்க மாவட்ட தனது உத்தரவில் கூறியுள்ளது.

  இதையும் படிங்க: இந்தியாவில் கடந்த ஓராண்டில் 20,000 பள்ளிகள் மூடல்.. கல்வி அமைச்சகம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைநகரில் உள்ள மக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அலுவலக பணி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வாகன மாசுபாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  பொதுவாக குளிர் காலங்களில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் முடிந்த போகத்தின் விவசாய குப்பைகளை எரித்துவிட்டு அடுத்த விதைத்தலுக்கு நிலத்தை ஏற்பாடு செய்வர். இந்த விவசாய கழிவு எரிப்புடன் வாகனப்புகை, தொழிற்சாலை புகைகளும் சேர்ந்து கொண்டு காற்றின் தரத்தை மிக மோசமாக சீரழித்து வருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Air pollution, Delhi, Noida, Online class, Online Education