மாறுவேடமணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த பெண்!

சபரிமலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 8:07 AM IST
மாறுவேடமணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த பெண்!
சபரிமலை சென்ற 35 வயதான மஞ்சு
Web Desk | news18
Updated: January 10, 2019, 8:07 AM IST
கேரளாவில் வயதானவர் போல் தோற்றத்தை மாற்றி 35 வயதான பெண் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதில் இருந்து சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதத்தில் கோவிலுக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு கொடுப்போம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

வயதானது போல வேடம் அணிந்து கொண்டு சபரிமலைக்கு சென்ற மஞ்சுளா


ஏற்கனவே 2 பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்த நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மகரஜோதி நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு என்ற 35 வயது பெண் மாறுவேடமணிந்து ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

சபரிமலை | sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவில்


அதன் பின்னர்  18 படியேறி சாமி தரிசனம் செய்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரம் அங்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Loading...
Also see... மீண்டும் உச்சத்தில் சபரிமலை விவகாரம்
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...