கர்நாடகா ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமளி! சட்டப்பேரவை ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு மேலும் ஆளும் அரசு தரப்பில் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அவகாசம் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார்.

கர்நாடகா ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமளி! சட்டப்பேரவை ஒத்திவைப்பு
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்
  • News18
  • Last Updated: July 22, 2019, 6:36 PM IST
  • Share this:
கர்நாடகா சட்டப்பேரவையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வந்து முழக்கத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து, சட்டசபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜீனாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் குமாரசாமி ராஜீனாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. அதனையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க குமாரசாமி ஒப்புக்கொண்டார்.

கடந்த வியாழக்கிழமை, குமாரசாமி பெரும்பான்மையை நிருபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று, அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதத்தை மட்டுமே செய்தார். இதற்கிடையில், குமாரசாமி அரசு மீது இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.


இந்தநிலையில், ஆறு மணிக்கு சட்டப்பேரவைக் கூடியது. முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு மேலும் ஆளும் அரசு தரப்பில் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அவகாசம் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார். இன்றே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அவைக்கு முன் வந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால், சட்டப்பேரவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதனையடுத்து, சட்டப்பேரவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also see:
First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading