• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கீழ்த்தரமான அரசியல்.. கணவருக்கு நீதி வேண்டி NCB அதிகாரியின் மனைவி மகாராஷ்டிர முதல்வருக்கு உருக்கமான கடிதம்!

கீழ்த்தரமான அரசியல்.. கணவருக்கு நீதி வேண்டி NCB அதிகாரியின் மனைவி மகாராஷ்டிர முதல்வருக்கு உருக்கமான கடிதம்!

Kranti Redkar

Kranti Redkar

2017ம் ஆண்டு சமீர் வான்கடேவை 2வது திருமணம் செய்து கொண்ட கிராந்தி அமைச்சர் நவாப் மாலிக் மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
மும்பை அருகே உல்லாச கப்பலில் போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதற்காக போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தாக்கி வரும் நிலையில், தனது கணவருக்கு நீதி வேண்டி, சமீர் வான்கடேவின் மனைவி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தை பகிர்ந்து அதனை மகாராஷ்டிர முதல்வருக்கு டேக் செய்துள்ளார் சமீரின் மனைவி கிராந்தி ரெட்கர்.

சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் அவர் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலியாக சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சமாக பணம் தரவேண்டும் என மிரட்டினார், சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்டார் என சமீர் வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.நவாப் மாகிலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் சமீரை மும்பை காவல்துறையினர் கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், சமீரின் மனைவி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு மராத்தியர் என்ற அடிப்படையில் உங்களிடம் (உத்தவ் தாக்கரே) இருந்து சிறிதளவாவது நீதியை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று பாலாசாகேப் தாக்கரே (உத்தவ் தாக்கரேவின் தந்தை) உயிரோடு இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மரியாதை மீதான தனிப்பட்ட தாக்குதலை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்.

Also read: ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல – அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

அவருடைய தலைமைப் பண்பு மற்றும் படிப்பினையின் வழித்தோன்றலாகவே உங்களை பார்க்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜாவை உத்வேகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அரசில் ஒரு பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நடிகை, என்னால் அரசியலை புரிந்து கொள்ளமுடியவில்லை. அதில் எனக்கு பற்றும் கிடையாது. என் மீது நடக்கும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் அரசியலின் கீழ்நிலையை காட்டுகிறது. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அநீதி இழைக்கப்படாது என உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கிராந்தி ரெட்கர் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு சமீர் வான்கடேவை 2வது திருமணம் செய்து கொண்ட கிராந்தி அமைச்சர் நவாப் மாலிக் மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: