விஐபி தொகுதியான அமேதியை இழக்கும் ராகுல்காந்தி?

விஐபி தொகுதியான அமேதியை இழக்கும் ராகுல்காந்தி?
ராகுல் காந்தி
  • Share this:
அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிர்தி இரானி தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், ராகுல்காந்தி அந்தத் தொகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் 2019 வரை 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அமேதி. இந்தத் தொகுதியில் இதற்கு முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் சிங் என்பவர் ஒரே ஒரு முறை வெற்றிபெற்றுள்ளார். சஞ்சய் சிங் 1998-ம் ஆண்டு வெற்றி பெற்று, ஒரு வருட காலம் மட்டுமே எம்.பி.யாக இருந்தார்.


காங்கிரஸை சேர்ந்த ராஜீவ் காந்தி 4 முறையும், ராகுல்காந்தி 3 முறையும், வித்யா தார் பாஜ்பாய் 2 முறையும், சதீஷ் ஷர்மா 2 முறையும், சோனியா காந்தி, சஞ்சய் காந்தி, சஞ்சய் சிங், ரவீந்திர பிரதாப் சிங் ஆகியோர் தலா ஒரு முறையும் அமேதியில் இருந்து மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது. அமேதி தொகுதியில் ராகுல்காந்தி எதிர்த்துப் போட்டியிட்ட பாஜவ்கவைச் சேர்ந்த ஸ்மிர்தி இரானி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அமேதியில் ஸ்மிர்தி இரானி வெற்றியடைந்தால், காங்கிரஸின் விஐபி தொகுதி பறிபோய்விடும். ஆனாலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்