ஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

ஸ்மிருதி இரானியின் வெற்றிக்கு அவரது உதவியாளர் சுரேந்திர சிங் பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு காலணி விநியோகித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராகவும் பார்க்கப்பட்டார்.

Web Desk | news18
Updated: May 26, 2019, 12:40 PM IST
ஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!
ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொலை
Web Desk | news18
Updated: May 26, 2019, 12:40 PM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி எம்.பி.யுமான ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்து வந்தது உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதி. இந்தத் தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியை, இந்தத் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்கு அவரது உதவியாளர் சுரேந்திர சிங் பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு காலணி விநியோகித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராகவும் பார்க்கப்பட்டார்.

இந்நிலையில், அமேதியில் உள்ள பராலியா கிராமத்தில் சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த அவரை அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

குண்டு அடிபட்ட சுரேந்திர சிங், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் சிலரை பிடித்து விசாரித்து வருவதாக அமேதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Also Watch: உயிரை துச்சமென கருதி மாடியில் ஏறி மாணவர்களை தீயிலிருந்து காப்பாற்றிய ஹீரோ!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...