அமெரிக்கா இந்தியாவை  200 ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்தது: உத்தரகண்ட் முதல்வரின் உளறல்

அமெரிக்கா இந்தியாவை  200 ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்தது: உத்தரகண்ட் முதல்வரின் உளறல்

உத்தரகண்ட் முதல்வர்.

நேரம் காலம் இருந்த போது 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர், ஏன் 20 பெற்றுக் கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் காலத்தில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் அதிக ரேஷன் கிடைத்திருக்குமே” என்று பிதற்றி எடுத்ததாக சமூக ஊடகங்கள் அவரை கடுமையாகச் சாடி வருகின்றன. 

  • Share this:
சர்ச்சைக்குரிய ஜீன்ஸ் பேன்ட் கருத்திற்குப் பிறகு உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்று உளறிக்கொட்டியுள்ளது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பிரிட்டன் என்பதற்குப் பதிலாக அமெரிக்கா என்று அவர் உளறிவிட்டார்.

இது குறித்த வீடியோவில் ராவத், “அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்தது.  உலகையே ஆண்டது, ஆனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது, சூரியன் மறையாத அந்த ராஜ்ஜியம் தற்போது போராடுகிறது” என்று பிரிட்டன் என்பதற்குப் பதிலாக அமெரிக்கா என்று உளறிக்கொட்டினார்.

ஆனால் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 130-135 கோடி மக்களை நிம்மதியாக வைத்துள்ளது. அமெரிக்கா சுகாதாரத் துறையில் நம்பர் 1, ஆனாலும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கோவிட் காரணமாக மரணமடைந்தனர். மீண்டும் லாக் டவுன் நோக்கிச் செல்கின்றனர்.

இவரது இந்த உளறலையடுத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ராவத்தை எப்படி உத்தரகண்ட் முதல்வராக தேர்வு செய்தனர்,நம்மை யார் ஆண்டார்கள் என்பதே அவருக்குத் தெரியவில்லை என்றும் சாடினார்.

மேலும் இவரை முதல்வராக்கிய நரேந்திர மோடி எப்படி இப்படி,’கற்றறிந்த திறமையை’ தேர்வு செய்திருக்கிறார் பாருங்கள் என்று கிண்டலடித்தார்.

நைனிடால் ராம்நகரில் அவர் கூறும்போது, ரேஷன் பற்றி தெரிவித்தார் அப்போது, “10 குழந்தைகள் உள்ளவர்களுக்கு 50 கிலோ, 20 குழந்தைகள் இருந்தால் ஒரு குவிண்டால், இரண்டு குழந்தைகள் இருந்தால்  10 கிலோ. மக்கள் ஸ்டோர்களை எழுப்புகிறார்கள், வாங்குபவர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். யாரைக் குறை கூறுவது?

நேரம் காலம் இருந்த போது 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர், ஏன் 20 பெற்றுக் கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் காலத்தில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் அதிக ரேஷன் கிடைத்திருக்குமே” என்று பிதற்றி எடுத்ததாக சமூக ஊடகங்கள் அவரை கடுமையாகச் சாடி வருகின்றன.
Published by:Muthukumar
First published: