முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று விஞ்ஞானி..! யார் அவர்?

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று விஞ்ஞானி..! யார் அவர்?

பாஸ்கர் ஹாலாமி

பாஸ்கர் ஹாலாமி

தற்போது அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள சினாவோமிக்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மரபணு மருந்துகள் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த நபர் இன்று அமெரிக்காவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிர்சடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி (44). இந்த கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாஸ்கரின் பெற்றோரோ வீட்டு வேலை செய்து வருகின்றனர்.

ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளின் படிப்பில் பாஸ்கர் தந்தை மிகுந்த அக்கறை காட்டினார். வீட்டிற்கு அருகே உள்ள கசன்சூர் என்ற இடத்தில் இயங்கி வந்த பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த பாஸ்கரின் தந்தை அதே பள்ளியில் பாஸ்கரை 4ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார். பிறகு அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.

கட்சிரோலியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த பாஸ்கர் ஹலாமி, நாக்பூரில் உள்ள கல்லூரியில் வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றார்.

ALSO READ | இந்த ஊருக்குள்ள குழந்தை பிறக்கவே கூடாது.. பெண்கள் பிரசவிக்க தடை விதித்த கிராமம்.. 400 ஆண்டுகால நம்பிக்கை!

கடந்த 2003ஆம் ஆண்டில் நாக்பூர்லட்சுமி நாராயணன் தொழில்நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பிறகு மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.

ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் இருந்ததால் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏ மற்றும் ஆர் என் ஏ பிரிவில் பிஎச் டி பட்டம் பெற்றார்.

தற்போது அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள சினாவோமிக்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மரபணு மருந்துகள் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சிர்சடி கிராமத்தில் இருந்து படித்து பட்டம் பெற்ற முதல் பட்டதாரியான பாஸ்கர் ஹலாமியை மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை சமீபத்தில் கவுரவித்தது.

First published:

Tags: Maharashtra, Scientist