முகப்பு /செய்தி /இந்தியா / அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு... ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ஆலோசனை

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு... ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ஆலோசனை

ஜி 20 மாநாடு

ஜி 20 மாநாடு

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட சர்வதேச பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ஆலோசனை மேற்கொண்டனர்.

டெல்லியில் ஜி-20 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அந்தோணி பிளிங்கன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ரஷியா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட சர்வதேச பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகள், இந்தோ-பசிபிக் பகுதியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, உலகளாவிய பிரச்னைகள், அமெரிக்க மற்றும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துதல் போன்றவற்றைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சுகாதாரம், தொழில்நுட்பம், எரிபொருள், உணவு உற்பத்தி, பெண்கள் முன்னேற்றம், போதைப்பொருள் தடுப்பு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Also Read : ”என்னுடைய போனை ஒட்டு கேட்டாங்க” - பெகாசஸ் குறித்து ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இதனிடையே, அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: America, External Minister jaishankar, G20 Summit