Home /News /national /

இது தான் ஜாக்பாட்.. ஓவர்நைட்டில் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

இது தான் ஜாக்பாட்.. ஓவர்நைட்டில் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

Jackpot

Jackpot

இந்த பணத்தின் மூலம் என் தாயாரின் உடல்நலத்தை சரி செய்துவிட முடியும். வசிக்க ஒரு சொந்த வீடு கட்டுவேன். இதைத் தவிர்த்து எதையும் யோசிக்கத் தோன்றவில்லை என்றார்.

    சாமானியரான ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் ஓவர்நைட்டில் கோடீஸ்வரராக மாறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ‘நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்’ என்ற வினாடி வினா நிகழ்ச்சி நமக்கெல்லாம் அறிமுகமான ஒன்று தான். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து கோடீஸ்வரர் ஆவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் பங்கேற்போர் பெரும்பாலும் சாமானியர்களாக இருப்பதில்லை. அதே நேரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு சாமானிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதிர்ஷ்டத்தின் துணையுடன் மட்டும் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக மாறியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

    மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரான ஷேக் ஹீரா, ஒரு நாள் காலை எழுந்து கடைக்கு சென்று 270 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்திருக்கிறார். அன்றைய மதியம் நடந்த லாட்டரி குலுக்கலில் ஷேக் ஹீரா வாங்கிய டிக்கெட்டுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அன்றைய தினம் மதியமே அவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். இதன் மூலம் ஒரே இரவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான ஷேக் கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஷேக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

    Also read:  தனக்கு வாக்களிக்காதவருக்கு எச்சிலை நக்க வைத்து கொடுமை - தேர்தலில் தோற்றவர் வெறிச்செயல்

    கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் தனக்கு லாட்டரி பரிசு விழுந்தது குறித்து பேசுகையில், “ஒரு நாள் எப்படியும் ஜாக்பாட் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் நான் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்களை வாங்கி வந்தேன். இறுதியில் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது” என்றார்.

    இந்த பணத்தை கொண்டு என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு, என்னுடைய பணப்பிரச்னைகள் இதன் மூலம் தீர இருக்கிறது. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு பணம் தேவையாக இருந்தது, தற்போது இந்த பணத்தின் மூலம் என் தாயாரின் உடல்நலத்தை சரி செய்துவிட முடியும். வசிக்க ஒரு சொந்த வீடு கட்டுவேன். இதைத் தவிர்த்து எதையும் யோசிக்கத் தோன்றவில்லை என்றார்.

    இதனிடையே காவல்நிலையத்துக்கு சென்ற ஷேக், தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம், எனது லாட்டரி டிக்கெட்டை யாராவது பறித்துக் கொள்வார்கள் என என கூறி பாதுகாப்பு கேட்டுள்ளார். அதன் பேரில் அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஜாக்பாட் தொகை விழுந்த டிக்கெட் வாங்கப்பட்ட கடைக்காரரான ஷேக் ஹனீஃப் கூறுகையில், என்னுடைய கடையில் இருந்து சிறிய அளவிலான பரிசுகள் சிலருக்கு கிடைத்துள்ளன. ஆனால் ஜாக்பாட் விழுந்திருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.
    Published by:Arun
    First published:

    Tags: Crorepati

    அடுத்த செய்தி