Home /News /national /

1800 கிலோ கஞ்சாவை ஏற்றிச் சென்ற ’ஆம்புலன்ஸ்’ !

1800 கிலோ கஞ்சாவை ஏற்றிச் சென்ற ’ஆம்புலன்ஸ்’ !

கஞ்சாவை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்

கஞ்சாவை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை சோதனை செய்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அதில் பண்டல் பண்டலாக கடத்தப்பட்ட 1800 கிலோ எடையுடைய கஞ்சாவை ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்

  • News18
  • Last Updated :
    சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் விசாகப்பட்டினம் அருகே 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1800 கிலோ கஞ்சா ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்  வாகனத்தை பிடித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள்

    சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை:

    சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக விசாகப்பட்டினம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில்  வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை சோதனை செய்து அதில் பண்டல் பண்டலாக கடத்தப்பட்ட 1800 கிலோ எடையுள்ள கஞ்சாவை ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 கோடியே 71 லட்சம் ரூபாய்:

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 கோடியே 71 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்த வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    அவசர காலத்தில் நோயாளிகளை ஏற்றிச் செல்லவேண்டிய ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Also Watch: டேங்க் நிறைய பெட்ரோல் நிரப்பலாமா? கூடாதா?

    Published by:Anand Kumar
    First published:

    Tags: Cannabis, Smuggling

    அடுத்த செய்தி