• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பால் கடும் பதற்றம்

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பால் கடும் பதற்றம்

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்திரபிரதேசம் கான்பூரில் அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ராணிப்பூர் சாலையை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Share this:
    இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலர் செங்கற்களால் தாக்கியதில் சிலையின் கை மற்றும் முகம் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, போலீஸ் சூப்பிரண்டு சுஷில் குலே கூறும் போது, சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்”

    மேலும் வேறொரு அம்பேத்கர் சிலை அங்கு வைக்கப்படும் என்றும் சுஷில் குலே தெரிவித்தார். அம்பேத்கர் சிலையின் முகமும் கைகளும் செங்கலால் அடித்து சிதைக்கப்பட்டதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூறியுள்ளனர். கோபமடைந்த பொதுமக்கள் ராணிப்பூர் சாலையை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சிலை அங்கு நிறுவப்பட்ட பிறகே மக்கள் அமைதி காத்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்படுவது பல காலமாக நடந்து வருகிறது. கோத்தியார் கிராமத்தில் ஜூன் மாதத்தில் ஒருமுறை சிதைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் மீண்டும் சரி செய்து அதே இடத்தில் வைத்த பிறகே மக்கள் கோபம் அமைதியடைந்தது. 2006-ம் ஆண்டு இதே கான்பூரில் இரண்டு அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

    இதையும் படிங்க: சமூக மாற்றத்திற்காக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடிய திருநங்கை!

    அம்பேத்கர் மட்டுமல்ல தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலையை உடைப்பதும், பெரியார் சிலையை அவமதிப்பதும் தொடர் நிகழ்ச்சிகளாவது ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல என்று சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து இத்தகைய செய்கைகளுக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் அம்பேத்கர் சிலைகள் தகர்க்கப்பட்டு அதனால் பதற்றங்கள் ஏற்பட்ட சம்பவம் உண்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: