இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. அப்போது விழாவில், பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இந்துக்களின் முழு முதல் கடவுளான பிள்ளையார் பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதேபோல் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி மகன் அர்ஜுனுடன் கலந்து கொண்டார். விழாவில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாரூக் கான் பங்கேற்பு...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.