• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Boycott Amazon : அமேசான் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள்!

Boycott Amazon : அமேசான் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள்!

அமேசான்

அமேசான்

அமேசான் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ள, டாய்லெட் சீட் கவர் உள்ளிட்ட பல பொருள்களில் இந்து கடவுளின் படங்கள் இடம்பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமேசான் நிறுவனத்துக்கு எதிராக #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

    உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் இணையதளம் முதலிடத்தில் இருந்துவருகிறது. இந்தியாவிலும் அமேசான் இணையதளம், வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது.

    மேலும், வீடியோ ப்ளார்ட்பாமிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, அமேசான் நிறுவனத்துக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

    அமேசான் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ள, டாய்லெட் சீட் கவர் உள்ளிட்ட பல பொருள்களில் இந்து கடவுளின் படங்கள் இடம்பெற்றுள்ளது. அது இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்று நெட்டீசன்கள் கொதிப்படைந்துள்ளனர்.

    அமேசான் நிறுவனத்துக்கு எதிராக #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. நெட்டிசன்கள் பலரும், அவர்களுடைய அமேசான் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்து, அதனை ஸ்கீரின்ஸாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். இருப்பினும், இந்த இணைய எதிர்ப்பு இதுவரையில் அமேசான் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: