முகப்பு /செய்தி /இந்தியா / அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.

அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். அமர்நாத் பனிக்குகை நோக்கி 43 நாட்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் யாத்திரை கடந்த ஜூன் 30 தொடங்கி நடந்து வருகிறது. இங்கு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய நேரத்தில் மிக கனமழை கொட்டுவது மேக வெடிப்பு என்று கூறப்படுகிறது.

அதுபோல, அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேக வெடிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, காயமடைந்தவர்கள் வான்வழியாக மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Flood