• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர் சிங்

amarinder singh

amarinder singh

ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் அமரீந்தர் சிங், தான் அவமானத்தை சந்தித்திருப்பதாக கூறினார்.

  • Share this:
பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது தலைமையிலான அமைச்சரவை விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே சில ஆண்டுகளாகவே மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் போக்கின் உச்சமாக தற்போது முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பவனில் இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அமரீந்தரின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் அமரீந்தர் சிங், தான் அவமானத்தை சந்தித்திருப்பதாக கூறினார்.

பேச்சுவார்த்தை நடந்த விதத்தால் நான் அவமானமாக உணர்கிறேன். நான் இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசினேன், நான் இன்று ராஜினாமா செய்வேன் என்று அவர்களிடம் சொன்னேன். என கேப்டன் அமரீந்தர் தெரிவித்தார்.

Also read: 60 வயது பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட ‘சைக்கோ’ இளைஞர்!

ராஜினாமா பின்னணி என்ன?

அமைச்சராக இருந்த போதே நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் இருவருக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. சித்து ராகுல் காந்தி டீமை சேர்ந்தவர் என்பதால், அந்த பலத்தில் அமரீந்தர் சிங்குடன் கரடு முரடான போக்கை கடைப்பிடித்து வந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்ற கேப்டன் அமரீந்தர் சிங்கின் பேச்சை மீறி சித்து கலந்து கொண்டார், இதனால் இவர்களின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் சித்து.

நிலைமை இப்படியே நீடித்த நிலையில் தன்னை மாநிலத் தலைவர் ஆக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி தந்தார் சித்து, பின்னர் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக்கியது கட்சி மேலிடம்.

Also read:  யூடியூப்பில் மாதம் 4 லட்சம் வருமானம் ஈட்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

தற்போது முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் விலகியிருப்பது சித்துவுடனான மோதலின் நீட்சி என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: