Home /News /national /

ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!

ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!

Amarinder Singh

Amarinder Singh

Punjab election results 2022: வெற்றி பெறுவதற்கு தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

    பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்தது. இதில், குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.

    இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து பிரச்சினைக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது.

    Also Read: கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நெருங்கும் பாஜக.. ஆட்சியை தக்க வைக்குமா?

    இதையடுத்து, அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண்டது.

    இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் காலை முதல் தொடர்ந்து, பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது தோல்வியை தழுவியுள்ளார்.

    மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. வெற்றி பெறுவதற்கு தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Aam Aadmi Party, Election 2022, Punjab

    அடுத்த செய்தி