ஜாலியன்வாலா பாக் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்

பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டருக்கு அருகிலுள்ள ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில், நேற்று மத்திய அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படது.

news18
Updated: April 14, 2019, 8:34 PM IST
ஜாலியன்வாலா பாக் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்
பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டருக்கு அருகிலுள்ள ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில், நேற்று மத்திய அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படது.
news18
Updated: April 14, 2019, 8:34 PM IST
ஜாலியன்வாலா பாக் படுகொலை விவகாரத்தை பிரதமர் மோடி அரசியலுக்கு பயன்படுத்துகிறார் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வின் நூறாவது ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டருக்கு அருகிலுள்ள ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில், நேற்று மத்திய அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படது.

அந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். இன்று, காஷ்மீரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஜாலியன்வாலா பாக் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குக்கு நேரம் இல்லை. அவர், வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேறுள்ளார். அவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று அவர்களது தலைமை உத்தரவிட்டுள்ளது’ என்று பேசியிருந்தார்.

மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரிட்டன்! ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூறாண்டு நினைவுகள்

இதற்கு பதிலளித்துள்ள அம்ரீந்தர் சிங், ‘ஜாலியன்வாலா பாக் விவகாரத்தில் மோடி அசிங்கமான அரசியல் செய்கிறார். மத்திய அரசு வேண்டுமென்றே, மாநில அரசு வேறு ஒரு நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், ஜாலியன்வாலா பாக் நினைவு தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வு நூற்றாண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்கு ஆதரவு வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் தனிப்பட்ட முறையில் பலமுறை மோடியிடம் கேட்டிருந்தேன்.

ஆனால், மத்திய அரசு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பெயர் எடுப்பதற்காக, மத்திய அரசு அமைதியாக தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜ.க போல, மாநில அரசுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மீது காங்கிரஸ் தலைமைக்கு நம்பிக்கை கிடையாது. அரசியலுக்காக தவறான செய்திகளை மோடி பரப்புகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...