ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாநிலங்களவை எம்பி ஆக எனக்கு தகுதி இல்லையா.. காங்கிரஸ் மீது நடிகை நக்மா அதிருப்தி

மாநிலங்களவை எம்பி ஆக எனக்கு தகுதி இல்லையா.. காங்கிரஸ் மீது நடிகை நக்மா அதிருப்தி

நக்மா

நக்மா

கட்சியில் இணைந்தபோது 2003-2004 ஆண்டுகளில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார். 18 ஆண்டுகள் ஆகியும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நடிகை நக்மா வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தனது பெயர் இல்லாததற்கு நடிகையும் அக்கட்சியைச் சேர்ந்தவருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். எம்பியாக தனக்கு தகுதி இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57  மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக சார்பில்  தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வழக்கறிஞர் கிரிராஜன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றியக் கழக செயலாளர் தர்மர்  ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவோரின் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது. தமிழகத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். சத்தீஸ்கரில் இருந்து  ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன், ஹரியானாவில் இருந்து  அஜய் மாக்கன், கா்நாடகாவில் இருந்து  ஜெய்ராம் ரமேஷ், மத்திய பிரதேசத்தில் இருந்து- விவேக் தன்கா, மகாராஷ்டிராவில் இருந்து இம்ரான் பிரதாப்கரி, ராஜஸ்தானில் இருந்து ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோரை வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: பாதுகாப்பை திரும்ப பெற்ற அரசு.. பிரபல பாடகர் சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை!

  இந்த வேட்பாளர் பட்டியலுக்கு நடிகையும் மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,கட்சியில் இணைந்தபோது 2003-2004 ஆண்டுகளில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியம் தனககு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து இம்ரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Congress, Nagma, Rajya sabha MP