கேரளாவில் தொகுதி மாறி ஓட்டுகேட்ட மத்திய அமைச்சர்...!

கேரளாவில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

news18
Updated: March 24, 2019, 7:11 PM IST
கேரளாவில் தொகுதி மாறி ஓட்டுகேட்ட மத்திய அமைச்சர்...!
பிரசாரத்தில் அல்போன்ஸ்
news18
Updated: March 24, 2019, 7:11 PM IST
கேரளாவில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், பக்கத்து தொகுதிக்குச் சென்று தனக்கு வாக்களிக்க பிரசாரம் செய்துள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய அமைச்சர்களுக்கு, மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

Read Also... “நான் பிராமணர்... சவுகிதார் ஆக முடியாது” சுப்பிரமணியன் சாமி அதிரடி

கேரளாவில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் அவர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பக்கத்து தொகுதியான சாலக்குடிக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொகுதி மாறி மத்திய அமைச்சர் ஓட்டு கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See...

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...