முகப்பு /செய்தி /இந்தியா / ஒரே நாளில் 3 விமானப் படை விமானங்கள் விழுந்து விபத்து.. காரணம் இதுதான்..!

ஒரே நாளில் 3 விமானப் படை விமானங்கள் விழுந்து விபத்து.. காரணம் இதுதான்..!

விமான விபத்து

விமான விபத்து

இந்தியாவில், ஒரே நாளில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்திய பிரதேச மாநிலம் மோரேனா பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட மிராஜ் ரக விமானமும், ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் ரக விமானமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முதல் கட்ட விசாரணையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளாகி நொறுங்கியது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி ஜென்ரல் அனில் சவுகானிடம் கேட்டறிந்தார். மேலும் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடமும் கேட்டறிந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, மீட்பு பணியில் உதவுமாறு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Air force, Flight Crash, Madhya pradesh