கொரோனா பரவல் மற்றும் புதிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினரை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. இது 3வது அலை பரவல் போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 58,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா என பல மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனிடையே புதிய ஓமைக்ரான் வேரியண்ட் பரவலும் அச்ச சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. வரும் ஜனவரி 9ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also read: 11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?
இதே போல கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதால் அங்கும் பல கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் அதிக பாதிப்பை சந்தித்து வரும் தலைநகர் பெங்களூருவில் வார இறுதி நாட்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடகாவின் கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, சில முக்கிய பரிந்துரைகளை மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அதன்படி, சிறப்பு பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் அளித்து வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக டயாலிசிஸ் மேற்கொள்வோர், புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையில் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை/ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகள், பிப்ரவரி மாத இறுதி வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் அரசு/ தனியார் என பாகுபாடு காட்டத்தேவையில்லை.
Also read: பிச்சை எடுத்து ஆதரவற்றவர்களின் பசியாற்றிய பிரபல சமூக சேவகி காலமானார்!
மேற்கண்ட சிறப்புப் பிரிவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் உடல்நிலை மேலும் மோசமடையக் கூடும் என ர்நாடக அரசுக்கு கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Omicron, Work From Home