அலோபதியால் கட்டுப்படுத்த மட்டுமே முடியும், ஆயுர்வேதம் தான் குணப்படுத்தும் - யோகா குரு பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

ஆயுர்வேத மருத்துவர்களாலும் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலும், யோகா 98% நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாகவும் பாபா ராம்தேவ் கூறினார்.

  • Share this:
அலோபதி மருத்துவத்திற்கும், ஆயுர்வேத மருத்துவத்திற்குமான நீயா, நானா போட்டியை தொடங்கி வைத்திருக்கிறார் யோகா குரு பாபா ராம்தேவ். சமீபத்திய நாட்களில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

பாபா ராம்தேவ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது எனவும் அது தோல்வியடைந்துவுட்டதாகவும் தெரிவித்திருந்தார். பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது, மேலும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் வலியுறுத்தியது. பாபா ராம்தேவ் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என ஷர்ஷவர்தன் அறிவுத்தினார்.

இதற்கிடையே அலோபதி மருத்துவமுறை மற்றும் மருத்துவர்களுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அவருக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்காவிட்டால் 1,000 கோடி ரூபாயை அவர் நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன் மீதும் தன்னுடைய ஆயுர்வேத செயல்பாடுகள் குறித்தும் சில தேச விரோத மாஃபியா கும்பல் தவறான தகவல்களை பரப்பி வருவதாக சிஎன்என் - நியூஸ்18க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

அலோபதியால் கட்டுப்படுத்த மட்டுமே முடியும், ஆயுர்வேதத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் எனவும் ஆயுர்வேத மருத்துவர்களாலும் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலும், யோகா 98% நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாகவும் பாபா ராம்தேவ் கூறினார்.

மேலும் கருப்பு பூஞ்சை தொற்றை சூர்ய நமஸ்காரமும், யோகாவுமே குணப்படுத்தும், இவை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என கூறிய பாபா ராம்தேவ், கொரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் அலோபதி மருந்துகள் எதுவும் காய்ச்சலை குணப்படுத்தும் என எந்தவித ஆராய்ச்சிகளும் இதுவரை தெரிவிக்கவில்லை ஆனால் பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்த ஆராய்ச்சி விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட போதிலும் அதனை போலி மருந்து என முத்திரை குத்துகின்றனர்.

Read More:  பரபரப்பை ஏற்படுத்திய அதிசய மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி!

வெண்டிலேட்டர் உதவியுடனும், ஐசியூவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கே அலோபதி வைத்தியம் தேவைப்படும் எனவும் பிற தீவிர தொற்றாளர்களை யோகாவே குணப்படுத்தும் என பாபா ராம்தேவ் கூறினார்.
Published by:Arun
First published: