Home /News /national /

Allodoxaphobia: பாஜகவை விமர்சிக்க வார்த்தை ஜாலத்தை பயன்படுத்திய சசிதரூர்

Allodoxaphobia: பாஜகவை விமர்சிக்க வார்த்தை ஜாலத்தை பயன்படுத்திய சசிதரூர்

சசி தரூர்

சசி தரூர்

Allodoxaphobia என்ற வார்த்தையை பாஜகவை விமர்சிக்க சசி தரூர் பயன்படுத்தியுள்ளார்.  இதற்கு கருத்துகளை பகுத்தறிவதற்கான பயம் அர்த்தம் என்பதாகும்.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர், ஆங்கில புலமை உள்ளவர். பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிறந்த சசி தரூர் வளர்ந்தது மற்றும் பட்டப்படிப்பை முடித்தது இந்தியாவில்தான்.

    ஆங்கில வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் விதமும் அவர் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்காகவும் சசிதரூர் அதிகம் அறியப்படுகிறார். ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத வார்த்தைகளை பயன்படுத்தி அவர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் பிரபலமானவை.

    Hippopotomonstrosesquipedaliophobia,   Floccinaucinihilipilification, Lalochezia,  Kakistocracy உட்பட சசிதரூர் பயன்படுத்திய அரிதான வார்த்தைகள் பல உண்டு. பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட தாடி வளர்ப்பை, 'போகோனோடிராபி' என்ற அரிய ஆங்கில வார்த்தையுடன் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட ட்விட் பலரையும் டிக்‌ஷனரியை தேட வைத்தது.

    தற்போது, Allodoxaphobia என்ற வார்த்தையை பாஜகவை விமர்சிக்க அவர் பயன்படுத்தியுள்ளார்.  இதற்கு அர்த்தம்  கருத்துகளை பகுத்தறிவதற்கான பயம் என்பதாகும். இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை எடுத்துகாட்டுடன் விளக்குவதாக குறிப்பிட்ட அவர், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு கருத்துகளை பார்த்து பயப்படுவதால் மக்கள் மீது உபா வழக்குகளையும் தேச துரோக வழக்குகளையும் போடுவதாக பதிவிட்டுள்ளார்.

     

    இதையும் படிங்க: சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: வலுக்கும் கண்டனம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, Shashi tharoor

    அடுத்த செய்தி