காங்கிரஸ் உடன் கூட்டணி உறுதி; பாஜகவை புறக்கணித்த குமாரசாமி

news18
Updated: May 16, 2018, 10:47 PM IST
காங்கிரஸ் உடன் கூட்டணி உறுதி; பாஜகவை புறக்கணித்த குமாரசாமி
news18
Updated: May 16, 2018, 10:47 PM IST
காங்கிரஸ் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. முன்னதாக தேர்தல் கருத்து கணிப்புகளின்படி அங்கு தொங்கு சட்டபேரவை தான் அமையும், ம.ஜ.த.  ‘கிங் மேக்கர்’ ஆக  திகழும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சட்டபேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அங்கு ஆட்சியமைக்க மொத்தம் 113 இடங்கள் தேவை. ஆனால் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த பாஜக 104 இடங்களை தான் வென்றது. காங்கிரஸ் 78 இடங்களையும், ம.ஜ.த. 38 இடங்களையும் வென்றன.

இந்நிலையில் அங்கு நேற்று திடீர் திருப்பமாக ம.ஜ.த.வுக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ம.ஜ.த. சார்பில் காங்கிரசின் இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜகதான் வெற்றி பெற்றுள்ளது, அதனால் கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சிக்கு  உத்தரவிட வேண்டும் என  ஆளுநர்  வஜுபாய் வாலாவை சந்தித்து  எடியூரப்பா உரிமை கோரினார். அவரை தொடர்ந்து ம.ஜ.த. தலைவர்  குமாரசாமியும் ஆளுநரை சந்தித்து ம.ஜ.த.வுக்கான காங்கிரஸ் ஆதரவினைக்  குறிப்பிட்டு ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் பாஜக ஆட்சியமைக்க ம.ஜ.த. ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவுடேகர்,  குமாரசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் எம்.எல்.ஏக்களுடனான கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி என  குமாரசாமி திட்டவட்டமாக  அறிவித்துள்ளார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்