முகப்பு /செய்தி /இந்தியா / கேரள கன்னியாஸ்திரிகளை யாரும் தாக்கவில்லை.. முதல்வர் பொய் சொல்கிறார் - பியூஷ் கோயல் விளக்கம்

கேரள கன்னியாஸ்திரிகளை யாரும் தாக்கவில்லை.. முதல்வர் பொய் சொல்கிறார் - பியூஷ் கோயல் விளக்கம்

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

ஜான்சி நிலையத்தில் கன்னியாஸ்திரிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேரள மாநிலத்தை இரண்டு கன்னியாஸ்திரிகள் டெல்லியில் இருந்து ஒடிசாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தனர். கன்னியாஸ்திரிகளுடன் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை வந்தடைந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த நபர்கள் மதமாற்றம் செய்பவர்கள் எனக் கூறி கன்னியாஸ்திரிகளை தாக்க முற்பட்டதாக தெரிகிறது.

இதன்காரணமாக ஜான்சி நிலையத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மதமாற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அடுத்த ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். கன்னியாஸ்திரிகள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கன்னியாஸ்திரிகளுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற சுழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

கேரளா சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கேரள மாநிலம் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ கன்னியாஸ்திரிகள் மீது சிலர் புகார் தெரிவித்தனர். இதன்காரணமாக போலீஸார் தங்களது கடமையை செய்தார்கள். புகார் சரியா? தவறா? என்று விசாரிக்க வேண்டியது போலீசாரின் கடமை.

இரு கன்னியாஸ்திரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தது. அவர்கள் உண்மையான பயணிகள் சரியான நோக்கத்திற்காக செல்கிறார்கள் என்பதை உறுதிசெய்துக்கொண்ட காவலர்களை விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுவித்தனர். புகார் அளித்த நபர்கள் கன்னியாஸ்திரிகளை தாக்கியதாக கூறுவது முற்றிலும் தவறானது. அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை. கேரள முதல்வர் பொய்யான தகவல்களை கூறுகிறார்” என்றார்.

First published:

Tags: Amit Shah, Kerala Nun, Pinarayi vijayan, Piyush Goyal, Uttar pradesh