• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அலகாபாத் இனி ப்ரயாக்ராஜ் - யோகி ஆதித்யநாத் முடிவு

அலகாபாத் இனி ப்ரயாக்ராஜ் - யோகி ஆதித்யநாத் முடிவு

யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தின் பெயரை ப்ரயாக்ராஜ் என அடுத்தாண்டு ஜனவரிக்குள் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரமான அலகாபாத், மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பண்டைய பெயரான ‘ப்ரயாக்’ மீண்டும் சூட்டப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அரசியல் தலைநகராக லக்னோ இருந்தாலும், பொருளாதார தலைநகராக இருப்பது அலகாபாத் நகரம்தான். அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் கூட இந்நகரத்திலேயே இருக்கின்றது.

16-ம் நூற்றாண்டில் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் ப்ரயாக் என்ற பகுதியின் கங்கை மற்றும் காவேரி நதி இணையும் இடத்தில் மன்னர் அக்பர் ஒரு கோட்டையை கட்டினார். அந்த பகுதிக்கு இலஹாபாத் என பெயரிடப்பட்டது.

அலகாபாத் கும்பமேளா (கோப்பு படம்)


பின்னர், அவரின் பேரன் ஷா ஹஜான் ஆட்சிக்காலத்தில் ப்ரயாக் என்ற பெயர் அலகாபாத் என மாற்றப்பட்டது. தற்போது, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அலகாபாத் நகரின் பெயரை மீண்டும் ப்ரயாக் என மாற்றம் செய்ய வேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்தின.

இதற்கு மாநில ஆளுநரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு முன்னர் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் பிரம்மன் குளித்து பிராத்தனை செய்ததால் அந்த இடத்திற்கு ப்ரயாக் என பெயர் வந்தது எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் அம்மாநிலத்தில் மொகல்சராய் என்ற ஊரின் ரயில் நிலையம் தீன்தயாள் உபாத்தியா என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றப்பட்ட மொகல்சராய் ரயில் நிலையம்


பாஜகவின் சித்தாந்த குருவாகிய தீன் தயாள் உபாத்தியா இந்த ரயில் நிலையத்தில் தான் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தார் என்பதால் அவரது பெயரில் ரயில் நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: