• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் - அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் - அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

பஹாரி பசு

பஹாரி பசு

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பசுக் கறி வைத்திருந்தவர்கள் என்று பலர் பசுக் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை காண முடிந்தது. இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பசுக்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கிவருகிறது.

    பசுக்களுக்கு பெட்ஷீட் வழங்கும் திட்டம் உள்ளிட்ட விமர்சனத்துக்கு உள்ளான பல திட்டங்களை யோகி அரசு கொண்டுவந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு பசு வதை தடுப்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் பசுவைக் கொலை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், உத்தரப் பிரதேச அரசின் பசுவதைச் சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சேகர் யாதவ் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

    அவர் அளித்த தீர்ப்பில், ‘இந்தியப் புராணங்களிலும், இந்தியாவின் கலாச்சாரத்திலும் பசு முக்கியமானதாக உள்ளது. தற்போதைய சூழலைப் பார்க்கும்போது பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். பசுப் பாதுகாப்பு என்பதை இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக கொண்டுவர வேண்டும். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பலவீனமடைந்துவிட்டால் தேசம் பலவீனமடையும் என்பது நமக்குத் தெரியும்.

    அதனால், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவைக் கொண்டுவர வேண்டும். பசுவுக்கு கொடுமை செய்வோரைக் கடுமையாகத் தண்டிக்கும் பிரிவுகளைக் கொண்டுவர வேண்டும். மாட்டிறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மனுதாரர் செய்த குற்றம் முதல்முறைஅல்ல, இதற்கு முன்பும் பசுவதை செய்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளியேவந்து அதே குற்றத்தைச் செய்வார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: