Home /News /national /

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை... கொட்டும் மழையில் மகன் உடலை தோளில் சுமந்து 2 கி.மீ. நடந்த தந்தை

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை... கொட்டும் மழையில் மகன் உடலை தோளில் சுமந்து 2 கி.மீ. நடந்த தந்தை

ஆம்புலன்ஸ் கிடைக்கததால் மகனின் உடலை தோளில் சுமந்து நடந்த தந்தை

ஆம்புலன்ஸ் கிடைக்கததால் மகனின் உடலை தோளில் சுமந்து நடந்த தந்தை

இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் விஜய் விஷ்வாஸ் பந்த் தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்த 15 வயது மகனின் உடலை  எடுத்து செல்ல ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் தந்தை தன் தோளில் சுமந்து 2 கிமீ நடத்து சென்ற அவல சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங்கி யாதவ். இவரது 15 மகன் சுபம் என்பவரை மின்சாரம் தாக்கிய நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து உடலை தனது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்ல பஜ்ரங்கி யாதவ் முயற்சித்துள்ளார்.

    மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர கோரியுள்ளார். அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ள நிலையில், பஜ்ரங்கி யாதவ்விடம் பணம் இல்லை. எனவே, வேறு வழியின்றி தனது  மகனின் உடலை கொட்டும் மழையில் தோளில் சுமந்து 2 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார். பின்னர், அந்த வழியாக வந்த ஒரு ராணுவ வீரர் இதை கவனித்து பஜ்ரங்கியிடம் என்னவென்று விசாரித்துள்ளார். தனது துயர நிலையை ராணுவ வீரரிடம் தந்தை கூறிய நிலையில், உடனடியாக அந்த ராணுவ வீரர் ஆம்புலனஸ்சுக்கு ஏற்பாடு செய்து உடலை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.


    இந்த அவல சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக மாவட்ட அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேவேளை, பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் விஜய் விஷ்வாஸ் பந்த் இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும், விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் கண்டறிந்து தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தம்பியின் சடலத்தை மடியில் வைத்து ஆம்புலன்ஸ்சுக்காக காத்திருந்த 8 வயது சிறுவன்.. நெஞ்சை உருக்கும் சம்பவம்

    கடந்த ஜூன் மாதம் மத்திய பிரதேச மாநிலம் மோரேனா பகுதியில், உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சாலையில் அந்த குழந்தையின் உடலை எட்டு வயது குழந்தை மடியில் கிடத்தி காவல் காத்த அவல சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ambulance, Uttar pradesh, Viral News

    அடுத்த செய்தி