• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உலகின் மிக நீண்ட விமான வழித்தடத்தில் பறக்க தயாராகும் 'ஏர் இந்தியா பெண் விமானிகள் குழு'

உலகின் மிக நீண்ட விமான வழித்தடத்தில் பறக்க தயாராகும் 'ஏர் இந்தியா பெண் விமானிகள் குழு'

பெண் விமானிகள்

பெண் விமானிகள்

உலகின் மிக நீளமான விமானப் பாதையை கடக்கும் முயற்சியில் ஏர் இந்தியாவை சேர்ந்த அனைத்து பெண் விமானிகளின் குழு வட துருவத்தின் மீது பறந்து வரலாற்றை படைக்க உள்ளது. 

  • Share this:
ஏஐ கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான இந்த விமானக் குழு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டு வட துருவத்தின் மேல் பறந்து 16,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து பெங்களூரு சென்றடையும். இதுகுறித்து சோயா அகர்வால் கூறுகையில், ‛உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் வடதுருவத்தையோ அல்லது அதன் வரைபடத்தையோ கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் அதன் மீது வெற்றிகரமாக பறக்க உள்ளோம். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். 

போயிங்-777 விமானத்தில் கேப்டனாக கட்டளையிட இது எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. அதுவும், வடதுருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறப்பது மகிழ்ச்சியான அனுபவமாகும்' இவ்வாறு அவர் கூறினார். அகர்வால் மற்றும் அவரது குழுவினர் போயிங் 777 ன்  தொடக்க நிகழ்வில் SFO-BLR ஐ பறக்கவிடுவார்கள், மேலும் உலகின் மிக நீண்ட விமான பாதையில் விமானத்தை பறக்கவிடுவது எங்களுக்கு கிடைத்த ஒரு "பொன்னான வாய்ப்பு" என்றும் கேப்டன் கருதுகிறார். 

இருப்பினும், கேப்டன் அகர்வாலுக்கு இது முதல் சாதனை அல்ல, 2013ம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை பறக்கவிட்ட இளைய பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார். செய்தி நிறுவனத்திடம் பேசிய ஏர் இந்தியாவை சேர்ந்த அதிகாரி ஒருவர், இந்த பணி மிகவும் சவாலானது என்றும், விமான நிறுவனம் தங்கள் விமானிகளில் மிகச் சிறந்த மற்றும் அனுபவமுள்ளவர்களை மட்டுமே வட துருவத்தின் மீது பறக்க அனுப்புகிறது என்றும் கூறினார். "இந்த முறை ஏர் இந்தியா ஒரு பெண் கேப்டனுக்கு சான்ஃபிரான்சிகோவிலிருந்து பெங்களூருவுக்கு துருவ பாதை வழியாக பயணம் செய்வதற்கான பொறுப்புகளை வழங்கியுள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார். 

அகர்வாலின் அணியில் தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே, மற்றும் சிவானி மன்ஹாஸ்  உள்ளிட்ட மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் உள்ளனர். அவரும் அவரது குழுவும் ஜனவரி 9ம் தேதிக்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும், உண்மையில் "எந்தவொரு விமானிக்கும் இது ஒரு கனவு நனவாகும் நாள்" என்றும் அகர்வால் கூறினார். இந்தியாவில் ஒரு சரக்கு ரயிலும் இதேபோல இயக்கப்பட்டுள்ளது. முதலில் மகாராஷ்டிராவிலிருந்து வதோதராவுக்கு அனைத்து பெண் குழுவினரால் இயக்கப்பட்டது. 

மேற்கு ரயில்வேயின் மும்பை பிரிவினால் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, லோகோ பைலட்கள் அல்லது ஃபிட்டர்கள், வெல்டர்கள் மற்றும் மேக்கானிஸ்ட்கள் போன்ற கனரக வேலைகளுக்கு வரும்போது பாலின நிலைப்பாடுகளை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு பெண்களால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவில் உச்ச பேரழிவு மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைப் படையான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் முதல் அனைத்து பெண் பேரிடர் மேலாண்மை குழுக்களும் இதில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: