• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒராண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி

ஒராண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி

 சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி

ஜிபிஎஸ் முறை அமலாகும் போது, நாடு முழுவதும் தடையில்லா வாகன போக்குவரத்து சாத்தியமாகும் எனவும் நிதின் கட்கரி கூறினார்.

  • Share this:
அடுத்த ஓராண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் பதிலளித்து இன்று பேசுகையில், “நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும், அங்கு காணப்படும் நீண்ட வாகன வரிசைகளும் இனி கடந்த காலமாக மாறப்போகிறது. இனி சுங்க வசூல் ஜிபிஎஸ் அடிப்படையில் வசூலிக்கப்படும்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக நிதின் கட்கரி கூறுகையில், ஜிபிஎஸ் இமேஜிங் அடிப்படையிலான முறையின் மூலம் வாகனங்களின் நகர்வு கண்காணிக்கப்படும், அதனடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறினார்.

இந்த முறை அமலாகும் போது, நாடு முழுவதும் தடையில்லா வாகன போக்குவரத்து சாத்தியமாகும் எனவும் நிதின் கட்கரி கூறினார்.

அடுத்த ஒராண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும் என இந்த அவையில் நான் உறுதி கூறுகிறேன் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

ஃபாஸ்ட் டேக் - போலீஸ் விசாரணை:

சுங்கச்சாவடி


மேலும் ஃபாஸ்ட் டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் 93% வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் முறையை பயன்படுத்தி கட்டணம் செலுத்தியுள்ளனர். ஃபாஸ்ட் டேக் பயன்படுத்தவில்லை என்றால் இருமடங்கு கட்டணம் செலுத்த நேரிடும் என தெரிந்தும் 7% பேர் இந்த முறைக்கு இன்னமும் மாறவில்லை. ஃபாஸ்ட் டேக் பயன்படுத்தாத வாகனங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன் எனவும் இவர்கள் தான் கட்டண திருட்டு மற்றும் ஜிஎஸ்டி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதிய வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் பொருத்தியே வருகின்றன, பழைய வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேகுகள் இலவசமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

2016ம் ஆண்டு முதல் ஃபாஸ்ட் டேக் முறை பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்காக சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: