ஹோம் /நியூஸ் /இந்தியா /

கார்களில் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் - இல்லையென்றால் அபராதம்!

கார்களில் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் - இல்லையென்றால் அபராதம்!

சீட் பெல்ட் கட்டாயம்

சீட் பெல்ட் கட்டாயம்

Traffic Rules | சீட் பெல்ட் அணியாத பட்சத்தில் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டில் சாலை விபத்துகளும், அதன் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சாலை போக்குவரத்து விதிகளை மீறுவதும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததுமே விபத்துகளுக்கான காரணங்களாக அமைகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், நான்கு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டால் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதும் தான் பொதுவான விதிமீறல்களாக உள்ளன.

  இந்த இரண்டு விதிகளையும் கடுமையாக அமல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேசமயம், விதி மீறுவோர் தொடர்ந்து அதை செய்தபடியே உள்ளனர். இதனால், விதிகளை கடுமையாக்கி, கடுமையான அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அனைத்து மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

  அனைத்து கார்களிலும் ஏர் பேக் சிஸ்டம் அவசியம் என்ற விதிமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

  Read More : இனி WhatsApp-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம் - வெளியாகும் புதிய அம்சம்

  அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

  மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி காரில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாகும். பெரும்பாலான கார்களில் முன்பக்க இருக்கைகளில் மட்டுமே சீட் பெல்ட் இருக்கிறது. பின்புற இருக்கைகளில் அவை இருப்பதில்லை.

  இந்த நிலையில், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் பொருத்தியிருக்க வேண்டும் என்றும், சீட் பெல்ட் அணியாத பட்சத்தில் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது.

  முன்னதாக, கார்களில் சீட் பெல்ட் பொருத்துவதற்கு போதிய கால அவகாசத்தை மகாராஷ்டிர அரசு வழங்கியது. கடந்த மாதம் 14ஆம் தேதியே இதுதொடர்பான அறிவிக்கை மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

  டெல்லியில் விதிகள் மாற்றம்

  கார்களின் பின்பக்க இருக்கைகளிலும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் திட்டத்தை டெல்லி அரசு அண்மையில் அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி சீட் பெல்ட் அணியாத பயணிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் அபராதம் அதிகரிப்பு

  தமிழகத்திலும்  சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது ஹெல்மெட் அணியாத பயணிகளுக்கான அபராதம் ரூ.1,000 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியும் பழக்கம் பெரும்பாலும் இல்லை.

  இனி அப்படி செல்வோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரது வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Automobile, Car