Home /News /national /

டெல்லியில் அனைத்துப் பள்ளிகளும் மூடல் : காற்று மாசு அதிகரிப்பு

டெல்லியில் அனைத்துப் பள்ளிகளும் மூடல் : காற்று மாசு அதிகரிப்பு

டெல்லியில் பள்ளிகள் மூடல்

டெல்லியில் பள்ளிகள் மூடல்

காற்றுமாசு விவகாரத்தை அர்விந்த் கெஜ்ரிவால் அரசு திறம்பட செயல்படவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்துப்பள்ளிகளும் மூடப்படுவதாக டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால்ராய் அறிவித்துள்ளார்.

    தீபாவளியை அடுத்து ஏற்பட்ட அதிகப்படியான காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகள் கடந்த 13ம் தேதி மூடப்பட்டன. நிலைமை ஓரளவு சீரடைந்ததால் கடந்த திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    இந்த சூழலில் காற்றுமாசு விவகாரத்தை அர்விந்த் கெஜ்ரிவால் அரசு திறம்பட செயல்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்திருந்தார்.

    Must Read : இந்தியாவில் கிளை பரப்பும் ஓமைக்ரான் வைரஸ் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

    24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தார். இந்த நிலையில் பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Air pollution, Delhi, School Holiday

    அடுத்த செய்தி