ஹோம் /நியூஸ் /இந்தியா /

பசுக்களை கொல்வதை நிறுத்தினால் உலகின் பிரச்னைகள் தீரும்... குஜராத் நீதிமன்றம்

பசுக்களை கொல்வதை நிறுத்தினால் உலகின் பிரச்னைகள் தீரும்... குஜராத் நீதிமன்றம்

பசுவதை குறித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

பசுவதை குறித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

2020இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக 22 வயதான முகமது அமீன் என்ற நபரை குஜராத் காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத்தின் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

நீதிபதி சமீர் தனது தீர்ப்பில், "பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள் அழிந்து போகும். பசு ஒரு விலங்கு அல்ல, அது ஒரு தாய்.

அதில் தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்கின்றனர். எனவே, பசுவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம். பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

First published:

Tags: Court, Cow, Cow Slaughter, Cow theft, Gujarat