காஷ்மீரில் 70 நாள்களுக்குப் பிறகு செயல்பாட்டுக்குவரும் மொபைல் இணைப்பு!

இதன்மூலம், 40 லட்சம் இணைப்புகள் பயன்பாட்டுக்கு வரும். இருப்பினும், 26 லட்சம் ப்ரிப்பெய்டு இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: October 12, 2019, 5:36 PM IST
காஷ்மீரில் 70 நாள்களுக்குப் பிறகு செயல்பாட்டுக்குவரும் மொபைல் இணைப்பு!
காஷ்மீர்
news18
Updated: October 12, 2019, 5:36 PM IST
காஷ்மீரில் முடக்கப்பட்டுள்ள மொபைல்போன் இணைப்புகளில் திங்கள்கிழமை முதல் போஸ்ட்பெய்டு இணைப்புகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து, மாநிலத்தில் கலவரம் உருவாகாமல் இருப்பதற்காக தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போதுதான், மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருகின்றன. மொபைல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 69 நாள்கள் கடந்தநிலையில், திங்கள்கிழமை முதல் போஸ்ட்பெய்டு இணைப்புகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், 40 லட்சம் இணைப்புகள் பயன்பாட்டுக்கு வரும். இருப்பினும், 26 லட்சம் ப்ரிப்பெய்டு இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், அந்த இணைப்புகளின் மூலம் இணையத்தைப் பயன்படுத்த முடியாது. இணைய இணைப்பு அளிப்பது குறித்து இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை. சமீபத்தில், சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வரலாம் என்று மாநில நிர்வாகம் அழைப்புவிடுத்திருந்தது. மொபைல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் சுற்றுலாப் பயணிகள் தவிக்க வேண்டிய சூழல் இருக்கும் என்பதால் தற்போது மொபைல் இணைப்புகள் அளிப்படுகிறது.

Also see:

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...