பொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது! எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி

பொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது! எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி
நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: November 17, 2019, 5:40 PM IST
  • Share this:
பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்துள்ளார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்கத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்பாக நாளை தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா அனைத்துகட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அதனையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டதுக்கு பிரதமர் மோடியும் வருகை தந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் 27 கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ‘பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படவேண்டும் என்று எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்கத் ஜோஷி, ‘நாடாளுமன்றத்தின் முக்கியப் பணி விவாதம் செய்வதுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று மோடி உறுதியளித்தார்’ என்று தெரிவித்தார். கூட்டம் குறித்து தெரிவித்த குலாம் நபி ஆசாத், ’தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பியும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவின் கைது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading