"மக்களவைத் தேர்தல் காலத்திலும் நாட்டின் பாதுகாப்பு முக்கியம்” - பிரகாஷ் ஜாவ்டேகர்

காங்கிரஸின் மணிஷ் திவாரி விமானத் தாக்குதல் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

Web Desk | news18
Updated: April 1, 2019, 4:47 PM IST
பிரகாஷ் ஜாவ்டேகர்
Web Desk | news18
Updated: April 1, 2019, 4:47 PM IST
"நம் முன் பலப் பிரச்னைகள் இருந்தாலும் நாடும் நாட்டின் பாதுகாப்பும்தான் முக்கியம்” என மத்திய மனித வளத்துறை அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 அஜெண்டா இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய ஜாவ்டேகர், “கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான முக்கியத்துவம் அதிகரித்துக் காணப்படுகிறது.

நாம் பேசும்போது வளர்ச்சி குறித்துப் பேசுகிறோம். ஊழல் குறித்தும் பாஜக செய்த நல்ல செயல்கள் குறித்தும் பேசுகிறோம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு குறித்து மட்டும் பேசினால் பலரையும் அது கீறுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

’நாட்டின் பாதுகாப்பு மீதான அரசியல்’ என்ற தலைப்பின் கீழ் பாஜக-வின் ஜாவ்டேகர் மற்றும் காங்கிரஸின் மணிஷ் திவாரி ஆகியோர் புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய பதில் தாக்குதல் அரசியல் ஆக்கப்படுவது குறித்து விவாதித்தனர். காங்கிரஸின் மணிஷ் திவாரி விமானத் தாக்குதல் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் மணிஷ் திவாரி பேசுகையில், “இந்தியா மட்டும் ரஃபேல் ரக ஜெட் போர் விமானங்களை சரியான நேரத்தில் வாங்கியிருந்தால் பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுகள் இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுப் பேசினார். மோடியின் இந்தப் பேச்சு குறித்து இதுவரையில் மோடியோ அவரது பிரதமர் அலுவலகமோ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை” என்றார்.

ஆனால், ஜாவ்டேகர் அரசுக்கு ஆதரவாக “விமானப்படை தாக்குதல் என்பது அவசியமானதாக இருந்தது. விமானப்படை பதில் தாக்குதல் குறித்துக் கேட்டபோது ஒரு விநாடியைக் கூட தாமதிக்காமல் விமானப்படையின் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டியதைச் செய்ய அனுமதியும் உடன் நிற்பதாக வாக்குறுதியும் அளித்தார்” எனப் பதிலளித்தார்.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





மேலும் பார்க்க: சிவகங்கையை ராகுல் தவிர்த்தது ஏன்...? மோடி பாணியில் ராகுல் போட்டியா...?
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626