விபத்து எதிரொலி... போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு இந்தியாவில் தடை...!

போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை நீக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விபத்து எதிரொலி... போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு இந்தியாவில் தடை...!
ஸ்பைஸ் ஜெட்
  • News18
  • Last Updated: March 13, 2019, 11:58 AM IST
  • Share this:
எத்தியோப்பியா விமான விபத்தில் 157 நபர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் இன்று முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் 8 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமும், ஜெட் ஏர்வேஸிடம் 5 விமானங்களும் உள்ளன.

ஜெட் ஏர்வேஸ்



போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்கத் தடை மற்றும் விமானச் சேவை ரத்துக் குறித்துச் சம்மந்தப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களிடமும் முன்னேற்பாடு நடவடிக்கை பற்றியும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விவாதித்து வருகிறது.

சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் செவ்வாய்க்கிழமை முதலே போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்க தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவில் நேற்று மாலை முதல் தடை விதித்துள்ளனர்.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியோனேஷியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லயன் ஏர்லைன்ஸின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது.அடுத்த 5 மாதத்தில் எத்தியோப்பியா விமான விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விமானத்தை இயக்க விமானிகள் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர்.

போயிங்


இந்திய அரசு முதலில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை மூத்த விமானிகளைத் தவிற வேறு யாரும் இயக்கக் கூடாது என்று திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மாலை 4 மணி முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை நீக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்