கோவிட் தொற்று மற்றும் ஊரடங்கால் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தான் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒரு சில விமானங்கள் இயங்கி வந்த போதும் விமான நிறுவனங்கள் பெரிதாக நஷ்டத்தில் இயங்கின. அதுமட்டுமின்றி, பல ஊழியர்களுக்கும் வேலை பறிபோனது. சிலருக்கு பாதிக்கும் மேல் சம்பளம் குறைக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான விமான நிறுவனங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு விமானங்கள் வழக்கமாக இயங்க தொடங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இதற்கு முன்பு வாங்கியிருந்த ஊதியம் இனி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதை பற்றிய முழு விவரங்கள் இங்கே.
டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில், குறைக்கப்பட்ட தொகையில் இருந்து, படிப்படியாக ஊழியர்களின் சம்பளம் இந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
also read : இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்
“பெருந்தொற்று காலம் தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் விமானத்துறை முழு வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எனவே, குறைக்கப்பட்ட சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும். ஏப்ரல் 1, 2022 முதல் இது அமல்படுத்தப்படும்” என்று ஏர்லைன் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானிகளுக்கு சம்பள அதிகரிப்பு :
விமானிகளைப் பொறுத்தவரை, தற்போது 20 சதவிகிதம் ஃபிளையிங் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. 35% அளவிலான சம்பளக் குறைப்பு அப்படியே இருக்கிறது என்றும், ஸ்பெஷல் பே வழங்கப்படும் விமானிகளுக்கு அலவன்ஸ் 25% அளவுக்கு வழங்கப்படும்.
also read : ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம்..! - விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி
விமானிகளுக்கு வழங்கப்படும் ஓவர்டைம் தொகையை மதிப்பாய்வு செய்து, மாற்றியமைக்கும் பட்சத்தில் அதைப்பற்றிய தகவலும் வெளியாகும்.
ஏர் இந்தியா கேபின் குழுவினருக்கு சம்பள அதிகரிப்பு :
கேபின் குழு ஊழியர்களுக்கு ஃபிளையிங் அலவன்ஸ் 10% தற்போது சேர்த்து வழங்கப்படுகிறது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில், அலவன்ஸ் 15% குறைக்கப்பட்டது. அதே போல, 20% வரை குறைக்கப்பட்ட வைட் பாடி அலவன்ஸ், தற்போது 5% அளவில் வழங்கப்படும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு :
நிறுவனத்தின் பிற அதிகாரிகளுக்கு, கோவிட் காலத்துக்கு முன்பு 50% வரை சம்பளம் குறைக்கப்பட்டது. தற்போது 25% வரை சேர்த்து வழங்கப்படும், அதாவது மொத்த சம்பளத்தில் 75% சம்பளம் இனி கிடைக்கும். மற்ற ஊழியர்களுக்கு, முழு சம்பளமும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இவை மட்டுமின்றி, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், விமானிகள், கேபின் ஊழியர்கள் உட்பட, அனைவருக்கும் அவரவர்கள் ரோலுடன் இணைக்கப்பட்ட ஸ்பெஷல் அலவன்ஸ் மற்றும் வேறு சில அலவன்ஸ்களும் ஏற்கனவே உள்ளபடி தொடர்ந்து வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air India