காஷ்மீரில் குவிக்கப்படும் படைகள்... மக்களிடையே பதற்றம் அதிகரிப்பு...!

காஷ்மீரில் உள்ள மக்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

காஷ்மீரில் குவிக்கப்படும் படைகள்... மக்களிடையே பதற்றம் அதிகரிப்பு...!
ஜம்மு-காஷ்மீர்
  • News18
  • Last Updated: August 3, 2019, 7:35 AM IST
  • Share this:
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் விரைந்து வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஏற்கனவே கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 25,000 பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநில உள்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் தங்களது பயணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு விரைந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


ராணுவம்

அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்கு கண்ணிவெடி புகைப்படத்தைக் காட்டுகிறேம். அதில் பாகிஸ்தான் ராணுவத் தொழிற்சாலை குறியீடு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம்தான் காரணம் என அது சொல்கிறது. இதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது.இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க காஷ்மீர் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

ஸ்ரீநகரிலிருந்து தேவைப்பட்டால் கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஸ்ரீநகருக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்வது அல்லது மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ய முயற்சி நடைபெறுவதைப் போன்று இருப்பதாக தெரிவித்தார்.மேலும் 2 நாடுகள் கொள்கையை நிராகரித்த முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரே மாநிலம் ஜம்மு-காஷ்மீர். கடுமையான சூழலிலும் கூட, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்துள்ளது. அதன் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

காஷ்மீரை பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சட்ட உத்தரவாதம் உள்ளது. இந்த உத்தரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதைப் போன்று தோன்றுகிறது என்றார்.

குலாம்நபி ஆசாத்

மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், மன்மோகன் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

சீதாராம் யெச்சூரி

மக்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் சத்யபால் மாலிக்

மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் விளக்கம் அளித்தார்.

மாநிலத்தில் அமைதியை நீடிக்கச் செய்ய உதவ வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆளுநர் சத்யபால் மாலிக் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க... தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் பலன்கள்?
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading