கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் முகநூல் பக்கத்தில் கன
மழை தொடர்பாக வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தை புரட்டி போட்டு வரும் கனமழை காரணமாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் V. R. கிருஷ்ண தேஜா IAS அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு அன்போடு பகிர்ந்து வரும் அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது பதிவில், "அன்புள்ள குழந்தைகளே, நாளையும் விடுமுறை அறிவுத்துள்ளேன் என்பதை கூறிக் கொள்கிறேன். நேற்று சொன்னதை மறக்காதே..மழைக்காலம் என்பதால், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது, பைகளில் குடை, ரெயின்கோட் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை வழி அனுப்பும் போது கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வழி அனுப்புங்கள் ... நாங்கள் இங்கேயே உங்களுக்காக காத்திருப்போம் கவனமாக வாகனம் ஓட்டி சென்று மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் வழி அனுப்புங்கள்...
நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலியாக இருங்கள்...மிகுந்த அன்புடன் உங்கள் பிரியமான கலெக்டர் மாமா."
இதையும் படிங்க:
இலவச அரிசியில் ஆரம்பித்து நிலவுக்கு சுற்றுப் பயணம் வரை.. அரசியல் கட்சிகளும் அதன் வாக்குறுதிகளும்!
இவ்வாறு மாணவர்களுக்கு கடிதம் எழுதி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு இவ்வாறு பாசத்துடன் எழுதும் அவரது அதிகாரபூர்வ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த போஸ்ட்டுக்கு சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள், 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஷேர்கள் கிடைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.