ஹோம் /நியூஸ் /இந்தியா /

Headlines Today : இந்தியாவுக்கு அல்-கொய்தா மிரட்டல்... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 8, 2022)

Headlines Today : இந்தியாவுக்கு அல்-கொய்தா மிரட்டல்... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 8, 2022)

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Headlines Today அல்கொய்தா தீவிரவாதிகள், இந்தியாவில் டெல்லி, மும்பை, குஜராத் மாநிலங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் சமத்துவபுரத்தை இன்று திறந்து வைக்கிறார்.

சிதம்பரம் கோயில் கணக்குகளை அறநிலையத் துறைக்கு வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 2ஆவது நாளாக இன்று ஆய்வு நடத்துகின்றனர் அதிகாரிகள்.

ஆதீனங்களை மிரட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊட்டச்சத்து பெட்டகத் திட்டத்தில் ஒரு இரும்பு சத்து மருந்தின் விலை 224 ரூபாய் என்பதில் உண்மையில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரும் வழக்கில், ஓபிஎஸ், ஈபிஸ் மற்றும் நிர்வாகிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்க எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆணையத்துக்கு அதிகாரமில்லை என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறாத வகையில், தமிழக அரசு இடைக்கால தடை பெற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பாஜக-வை கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மற்றும் மருத்துவமனைகளில் வருமானவரி துறையினர் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஸ்கேன் சென்டர் மற்றும் அதன் உரிமையாளர் கோவிந்தராஜன் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் இரவிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் போலீசார் 4 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுத்துள்ளனர். சிலைகளை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்வது குறித்து ஆராய குழு அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் தேவை என அமலாக்கத் துறையிடம் சோனியாகாந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Must Read : பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோய்க்கான மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Headlines, Today news, Top News