திகார் சிறையில் மருத்துவராக பணியாற்ற அனுமதிக்க கோரி அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர் மனு!

மாதிரி படம்

2007ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இங்கிலாந்தின் கிளாஸ்கோவ் விமான நிலைய தற்கொலைப் படை தாக்குதல் வழக்கில் சபீல் அகமது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

  • Share this:
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்ததாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் ஒரு அனுபவமிக்க மருத்துவர் என்பதால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் திகார் சிறை அதிகாரிகளுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சபீல் அகமது என்ற அந்த நபர் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இந்திய துணைக் கண்டத்தில் அல்கொய்தாவின் (AQIS) உறுப்பினர் ஆவார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அல் கொய்தா இயக்க உறுப்பினர்களுக்கு நிதி உள்ளிட்ட பிற உதவிகளை அளித்ததாக சபீல் அகமதுவை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மருத்துவரான சபீல் அகமது, கொரோனா பரவலால் திகார் சிறையில் சக கைதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சிறை நிர்வாகத்தினருக்கு உதவும் வகையில் தன்னை மருத்துவராக பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறை நிர்வாகத்தினருக்கு உதவும் வகையில் சபீல் அகமதுவை மருத்துவராக பணியாற்ற சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவருடைய வழக்கறிஞர் எம்.எஸ்.கான் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “சபீல் அகமது சிக்கலான நிகழ்வுகளில் சிகிச்சையளிப்பதில் ஏழு வருட அனுபவம் கொண்ட ஒரு தகுதிவாய்ந்த எம்பிபிஎஸ் மருத்துவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

Read More:  சுவாசப் பயிற்சிகள் செய்து ஒரு நுரையீரலுடன் கொரோனாவை வென்ற செவிலியர்: தன்னம்பிக்கை நாயகி!

கொரோனா தொற்றின் எழுச்சியைக் கையாள்வதற்கும், திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒரு மருத்துவ நிபுணராக இருந்த அவரது அனுபவமும் நிபுணத்துவமும் உதவியாக இருக்கும்.

எனவே, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், சபீல் அகமது மருத்துவராக உதவி புரியலாம் என்பதை நீதிமன்றம் சரி என கருதும் பட்சத்தில் மருத்துவ நோக்கங்களுக்காக சிறை நிர்வாகத்திற்கு உதவ அனுமதி வழங்கி சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவளிக்க வேண்டும் என நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.”

Read More:  சாவின் விளிம்பில் அம்மா.. வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்: மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

2007ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இங்கிலாந்தின் கிளாஸ்கோவ் விமான நிலைய தற்கொலைப் படை தாக்குதல் வழக்கில் சபீல் அகமது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். இவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி சவுதி அரேபிய அரசு இந்தியாவிற்கு நாடு கடத்தியது. இவர் மீது பெங்களூருவில் உள்ள வழக்கின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை இவரை விசாரித்திருக்கிறது.
Published by:Arun
First published: