• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் வன்முறை: நாங்கள் எதிர்பார்த்த பாதையில் வழக்கு செல்லவில்லை... உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

லக்கிம்பூர் வன்முறை: நாங்கள் எதிர்பார்த்த பாதையில் வழக்கு செல்லவில்லை... உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

லக்கிம்பூர் கெரி வழக்கு

லக்கிம்பூர் கெரி வழக்கு

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் உள்ளிட்ட விவரங்களையும் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

  • Share this:
    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் நிலை குறித்த 2வது அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, 68 சாட்சிகளில் 30 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 23 பேர் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றிருந்தபோது வெறும் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா  என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். விசாரணை குழு மேலும் அதிகமான நேரடி சாட்சிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாங்கள் எதிர்பார்த்த பாதையில் இந்த வழக்கு செல்லவில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏமாற்றம் தெரிவித்தது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் உள்ளிட்ட விவரங்களையும் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

    இதையும் படிங்க: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படாதது ஏன் - மத்திய அரசு பதிலளிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!


    பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் (ஓய்வு) அல்லது நீதிபதி ரஞ்சித் சிங் (ஓய்வு) விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: